செய்தி எதிரொலி:பெரியாறு அணை ரூல்கர்வ் முறையை அகற்ற சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர நிதி

Mullaperiyar Dam Latest News - சிவகங்கை மாவட்ட விவசாய சங்கங்கள் சார்பில், முல்லைப்பெரியாறு அணையில் ரூல்கர்வ் முறையினை அகற்ற வழக்கு தொடர நிதி வழங்கினர்.

Update: 2022-07-23 03:18 GMT

முல்லைப்பெரியாறு அணை.

Mullaperiyar Dam Latest News -முல்லைப்பெரியாறு அணையில் கேரளா அடுத்தடுத்து பல்வேறு பிரச்னைகளை உருவாக்கி வருகிறது. ரூல்கர்வ் முறையினை அமல்படுத்த தண்ணீரை 136 அடிக்கு மேல் தேக்க விடாமல் தடுக்கிறது. ரூல்கர்வ் முறையினை அகற்ற மீண்டும் சுப்ரீம்கோர்ட் செல்ல பொருளாதார ரீதியாக பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் திணறியது. இதனை சுட்டிக்காட்டி இன்ஸ்டா நியூஸ் செய்தி தளம் செய்தி வெளியிட்டது.

இந்த செய்தி தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமனாதபுரம் மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் படித்து பார்த்தனர். இதனைத்தொடர்ந்து, சிவகங்கை மாவட்டம் மேலப்பூங்கொடி ஆதினமிளகி அய்யனார் கோயிலில் ஆலோசனை கூட்டம் நடந்தது. பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க நிர்வாகிகள் அன்வர்பாலசிங்கம் தலைமையில் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அழகமாநகரி, ஏரியூர், திருமலை, கீழப்பூங்கொடி, நாலுகோட்டை, சாலுார், மலம்பட்டி, பிரவலுார், திருமண்பட்டி, சோழபுரம் பகுதி விவசாய சங்க நிர்வாகிகளும் பங்கேற்றனர். பெரியாறு அணையில் ரூல்கர்வ் முறையினை அமல்படுத்தினால், சிவகங்கை மாவட்டத்தில் பாசனம் முழுமையாக பொய்த்து போய் விடும். எனவே ரூல்கர்வ் முறையினை அகற்ற சுப்ரீம்கோர்ட்டில் அவசர வழக்கு தொடர முடிவு செய்யப்பட்டது.

இந்த செலவுகளை ஏற்றுக் கொள்ள சிவகங்கை மாவட்ட விவசாயிகள் பலர் முன்வந்துள்ளனர். முதல் கட்டமாக ஒரு லட்சம் ரூபாய் பணத்தை பெரியாறு, வைகை பாசன விவசாயிகள் சங்கத்திற்கு வழங்கினர். தொடர்ந்து தேவைப்படும் நிதி வழங்குவதாகவும், அணைப்பிரச்னையில் தொய்வின்றி துரிமான நடவடிக்கைகள் எடுக்கவும் பெரியாறு, வைகை பாசன விவசாயிகள் சங்க நிர்வாகிகளுக்கு சிவகங்கை மாவட்ட விவசாயிகள் வேண்டுகோள் விடுத்தனர். வரும் வெள்ளிக்கிழமைக்குள் அவசர வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விடும் என ஒருங்கிணைப்பாளர் அன்வர்பாலசிங்கம் தெரிவித்தார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News