மதுரை- தேனி இடையே முழு ரயில் சோதனை ஓட்டம்: ஜன. 31 ல் இயக்கப்படுகிறது

மதுரை- தேனி இடையே வரும் ஜன. 31ம் தேதி முழு பயணிகள் ரயில் சோதனை ஓட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-01-27 09:15 GMT

பைல் படம்

வரும் ஜனவரி 31ம் தேதி மதுரை- தேனி இடையே முழுமையான ரயில் இயக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது.

மதுரை- போடி இடையே 95 கி.மீ., துாரம் இருந்த மீட்டர் கேஜ் ரயில்பாதை அகல ரயில்பாதையாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. சுமார் 11 ஆண்டுகளுக்கும் மேல் இப்பணி நீடித்து வருகிறது. தற்போதய நிலையில் மதுரையில் இருந்து தேனி வரை பணிகள் முழுமையாக நிறைவடைந்து விட்டன. தேனி- போடி இடையே பணிகள் நடைபெற்று வருகின்றன. மதுரை- தேனி இடையே ரயில் என்ஜின் இயக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. அதில் திருப்தி ஏற்பட்டதால் வரும் ஜனவரி 31ம் தேதி முழுமையான பயணிகள் விரைவு ரயில் இயக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளது. இந்த சோதனை ஓட்டமும் வெற்றி பெற்றால், அடுத்த மூன்று மாதங்களுக்குள் வழக்கமான ரயில் போக்குவரத்து தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News