தமிழகத்தில் முழு ஊரடங்கு: எல்லைகளில் மூடப்பட்ட சோதனை சாவடிகள்

தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், தமிழக- கேரள எல்லையில் உள்ள சோதனைச்சாவடிகள் மூடப்பட்டுள்ளன

Update: 2022-01-09 07:45 GMT

தேனி மாவட்ட எல்லையில் உள்ள போடிமெட்டு சோதனை சாவடி இன்று காலை முதல் மூடப்பட்டு இருந்தது.

தமிழகத்தில் முழு ஊரடங்கு இன்று அமலில் உள்ளதால் எல்லையில் சோதனைச் சாவடிகள் மூடப்பட்டுள்ளன.

ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் கேரளாவில் ஊரடங்கு அமலில் இல்லை. அங்கு வழக்கம் போல் வாகன போக்குவரத்து நடந்து வருகிறது. எனவே தேனி மாவட்டத்தையும், கேரளாவின் இடுக்கி மாவட்டத்தையும் இணைக்கும் குமுளி, கம்பம் மெட்டு, போடி மெட்டு சோதனைச்சாவடிகள் மூடப்பட்டு விட்டன. கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் திரும்ப அனுப்பி வைக்கப்படுகின்றன. தமிழகத்தில் இருந்து கேரளாவிற்குள் செல்லவும் அனுமதிக்கப்படவில்லை. பால், காய்கறி, சபரிமலை பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவதாக வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News