அடிதடியில் தொடங்கி ஆசிட் வீச்சு வரை.. வீரியமடையும் திமுக தேர்தல் களம்
தேனி தி.மு.க., தெற்கு மாவட்டத்தில் நடந்த கோஷ்டி மோதலின்போது வேட்புமனுதாக்கல் செய்தவர் மீது ஆசிட் வீசப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி தெற்கு மாவட்டத்தில் தி.மு.க., தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடேறிக்கொண்டே இருக்கிறது. நிர்வாகிகள் பெரும்பாலும் அறிவிக்கப்பட்டே வருகின்றனர். இதனால் உத்தமபாளையத்தில் தி.மு.க.,விற்குள் அடிதடி அரங்கேறியது.
கம்பத்தில் சாலை மறியல், தீக்குளிப்பு போன்ற முயற்சிகள் நடைபெற்றன. இப்போது பண்ணைப்புரத்தில் ஆசிட் வீச்சு நடைபெற்றுள்ளது. பண்ணைப்புரத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் செயலாளர் பதவிக்கு போட்டியிட விருப்பமனு வாங்கி உள்ளார். இதனால் எதிர்கோஷ்டியினர் அவர் மீது ஆசிட் வீசியுள்ளனர்.
ராஜேந்திரன் தற்போது தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். தேவாரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திமுகவினரிடையே அடிதடி, ஆசிட் வீச்சு சம்பவத்தால் தேனி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.