கருத்து சுதந்திரம் என்ற பெயரில் விஷத்தை கொட்டாதீர்கள் : விவசாயிகள் குமுறல்

கருத்து சுதந்திரம் என்ற பெயரில் சமூக வலைதளங்களில் விஷத்தை கொட்ட வேண்டாம் என 5மாவட்ட விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Update: 2022-01-18 10:15 GMT

கர்னல் ஜான் பென்னிகுயிக்

தமிழ்நாடு பாரதீய கிசான் சங்கத்தின் தேனி மாவட்ட நிர்வாகிகள், கூடலுார் முல்லைச்சாரல் விவசாயிகள் சங்கம் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் கூறியுள்ளதாவது: கண்டிக்கின்றோம்!..வன்மையாக கண்டிக்கின்றோம்!..கவிஞர் வெண்ணிலா  "முல்லை பெரியாறு அணையை" கட்டிய கர்னல் ஜான் பென்னிக்குயிக் தனது சொந்த சொத்துக்களை விற்றுதான் கட்டினாரா? அதற்கான எந்த ஆவணங்களும் புத்தகங்களில் இல்லை...எனவும்....மிகவும் சர்ச்சைக்குரிய பதிவை தனது முகநூலில் பதிவிட்டு,அந்த பதிவுகள் சம்மந்தமாக அனைவரின் கடுமையான விமர்சனத்திற்கு ஆளாகி வருகின்றார்...

தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்ட மக்களின்,விவசாய மற்றும் குடிநீர் வாழ்வாதாரமாக இருந்து வரும் முல்லை பெரியாறு அணையினை கட்டிய கர்னல் ஜான் பென்னிக்குயிக் குறித்து அவதூறு பரப்பியும், விசம பிரச்சாரம் செய்யும் வகையில் அவர் பதிவிட்டுள்ள முகநூல் பதிவுகளானது, அனைத்து விவசாயிகளின் மற்றும் பொதுமக்களின் மனதை வெகுவாக புண்படுத்தி விட்டது. ஆகவே அவர் உடனே அந்த பதிவை திரும்ப பெற வேண்டும். எங்கள் மனதை புண்படுத்தியமைக்காக தமிழகத்தின் ஐந்து மாவட்ட விவசாயிகளிடமும் பொதுமன்னிப்பு கோரவேண்டும்.

கருத்து சுதந்திரம் என்பது கவிஞர்களுக்கு மட்டுமே இல்லை. அனைவருக்கும் உண்டு தானே?தமிழக முதல்வர் கவிஞர் வெண்ணிலா மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கவிஞர் வெண்ணிலாவின் இச்செயலை கண்டித்து ஐந்து மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் கருப்புக்கொடி காட்டி கண்டணம் தெரிவிக்க உள்ளோம். தொடர்ந்து முல்லைப்பெரியாறு அணை சம்மந்தமான சர்ச்சைகளும்,ஜான் பென்னிக்குயிக் சம்மந்தமாக சர்ச்சைக்குரிய பதிவுகளும் சமூக வலைதளத்தில் பதிவிடுவோர் அதிகரித்துள்ளனர். தேவையற்ற விசம பதிவுகள் பதிவிடுவோர் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளனர்.

Tags:    

Similar News