தேனி: செயற்கை நகை தயாரிக்க இலவசப் பயிற்சி

தேனி கனரா வங்கி சார்பில் இலவச நகை தயாரிப்பு பயிற்சி வழங்கப்படுகிறது;

Update: 2021-12-14 03:15 GMT

தேனி தாலுகா அலுவலகம் எதிரில் உள்ள கனரா வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிலையத்தில் செயற்கை நகை தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இலவச செயற்கை நகை ஆபரணங்கள் தயாரிப்பு பயிற்சி டிசம்பர் 20 ஆம் தேதி திங்கள்கிழமை துவங்கி 13 நாட்கள் நடைபெற உள்ளது. பயிற்சி கட்டணம் இல்லை, பயிற்சிக்கான உபகரணங்கள் மற்றும் காலை,மதிய உணவு முற்றிலும் இலவசம்.பயிற்சியின் முடிவில் சான்றிதழ் மற்றும் தொழில் துவங்க வங்கி கடன் ஆலோசனை வழங்கப்படும்.

விருப்பம் உள்ள நபர்கள் 04546-251578 & 9500314193 & 8190922599& 9442758363 & 8870376796 & 8344406777என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் அல்லது நேரில் வந்து முன் பதிவு செய்துகொள்ளலாம் என்று தேனி கனரா வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிலைய  நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News