தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனையில் இலவச சிறப்பு பிரிவு மருத்துவ முகாம்

தேனியில் உள்ள தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனையில் வயிறு, குடல், கணையம், கல்லீரல், பித்தப்பை பிரச்சனைகளுக்கான மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.;

Update: 2022-06-20 12:12 GMT

தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனையில் நடைபெற்ற மருத்துவ முகாம் நடைபெற்றது.

தேனியில் உள்ள தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனையில் வயிறு, குடல், கணையம், கல்லீரல், பித்தப்பை பிரச்சனைகளுக்கான மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.

இரத்தத்தில் உள்ள உப்புச்சத்து, சிறுநீரில் உள்ள உப்புச்சத்து மற்றும் இரத்தத்தில் சர்க்கரை அளவு இலவசமாக பார்க்கப்பட்டது. வயிறு மற்றும் குடல் அறுவை சிகிச்சை சூப்பர் ஸ்பெசாலிடி மருத்துவர் அசோக்குமார் அனைவருக்கும் பரிசோதனைகள் செய்தார்.

முகாமில் தேவைப்பட்டோருக்கு எண்டோஸ்கோபி, சிக்மோய்டோஸ்கோபி, கொலொனோஸ்கோபி, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் ஆகிய பரிசோதனைகள் சலுகை கட்டணத்தில் பார்க்கப்பட்டன. முகாமில் அல்சர், அடிக்கடி விக்கல், எதுக்களித்தல், வயிறு வீக்கம், கல்லீரல், மண்ணீரல், கணையம் வீக்கம், குடிப்பழக்கத்தால் கணையம் பாதிப்பு அடைந்தவர்கள், பசியின்மை ,பித்தப்பையில் கற்கள், மலச்சிக்கல், பெருங்குடல் மற்றும் ஆசனவாய் புற்றுநோய், இரத்த வாந்தி, தொடர் வயிற்று வலி, விஷம் அருந்தி குடல் சுருக்கம் அடைந்தவர்கள் என பல்வேறு நோய் பாதிப்பிற்கு உள்ளான 125 க்கும் மேற்பட்டோர் கலந்து பயன்பெற்றார்கள்.

இந்த மருத்துவ முகாமிற்கான ஏற்பாடுகளை மருத்துவமனை மேலாளர் சாந்தி, மக்கள் தொடர்பு அலுவலர்கள் சலீம், ஷேக் பரீது, தீபன், கார்த்திக் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News