தேனி கனரா வங்கி சார்பில் பெண்களுக்கு இலவச தையல்கலை பயிற்சி
தேனி கனரா வங்கி தொழில் பயிற்சி மையம் சார்பில் பெண்களுக்கு இலவசமாக 30 நாள் தையல் பயிற்சி அளிக்கப்படுகிறது;
தேனி தாலுகா அலுவலகம் எதிரில் இயங்கி வரும் கனரா வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிலையத்தில் 30 நாட்கள் நடைபெறும் இலவச தையல் பயிற்சியில் பெண்கள் சேர்ந்து கொள்ளலாம்(Women's Tailor free training). வரும் ஜனவரி 03 ஆம் தேதி திங்கள்கிழமை முதல் பயிற்சி துவங்க உள்ளது.
பயிற்சி கட்டணம் இல்லை, பயிற்சிக்கான உபகரணங்கள் மற்றும் காலை,மதிய உணவு முற்றிலும் இலவசம்.பயிற்சியின் முடிவில் சான்றிதழ் மற்றும் தொழில் துவங்க வங்கி கடன் ஆலோசனை வழங்கப்படும்.விருப்பம் உள்ள நபர்கள் 04546-251578 & 8190922599 & 9500314193 & 9442758363 & 8870376796 & 8344406777என்ற எண்களில் தொடர்பு கொள்ளவும் அல்லது நேரில் வந்து முன் பதிவு செய்துகொள்ளலாம்.
பயிற்சி வகுப்பு நேரம் : காலை 09.30 முதல் மாலை 5.30 மணி வரை.
முகவரி : கனரா வங்கி ர்செடி, உழவர் சந்தை எதிர் புறம், கான்வென்ட் அருகில், தேனி.