தேனி மாவட்டத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை அரசு சார்பில் இலவச வேலை வாய்ப்பு முகாம்
தேனி மாவட்டத்தில் டிசம்பர் 19ம் தேதி மாவட்ட நிர்வாகம் சார்பில் இலவச வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது;
தேனி மாவட்டத்தில் வரும் 19ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. கம்பம் ஆதிசுஞ்சனகிரி மகளிர் கல்லுாரியில் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை முகாம் நடக்கிறது.
இம்முகாமில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் வேலைவாய்ப்பு துறையின் www.tn.privatejobs.tn.go.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
தேனி மாவட்ட நிர்வாகம், தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தேனி மாவட்ட ஊரக மற்றும் நகர்ப்புற இயக்கம் இணைந்து கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வரும் 19ஆம் அன்று ஞாயிற்றுக்கிழமை இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்துகின்றனர். இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும்.
முகாமில் தமிழகம் முழுவதும் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு பணியாட்களை தேர்வு செய்த உள்ளனர். கல்வித்தகுதி எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை மற்றும் ஐடிஐ, டிப்ளமோ, பி.இ, நர்சிங், பார்மசி, டெய்லரிங், டிரைவர் மற்றும் இதர கல்வித் தகுதியுடைய அனைவரும் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் பங்கேற்க எவ்வித கட்டணமும் இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முகாமில் கலந்து கொள்பவர்கள் தங்களது அனைத்து கல்வி சான்றிதழ்களின் நகல்கள் குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், ஆகியவற்றுடன் வரவேண்டும்.இம்முகாமில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் வேலைவாய்ப்பு துறையின் இணையதளம் www.tn.privatejobs.tn.go.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
இம் முகாமில் பங்கேற்று பணியாட்களை தேர்வு செய்ய விரும்பும் தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் வேலை நாடுநர்கள் இம்முகாம் தொடர்பான தகவல்கள் அறிய thenideojobmela@gmail.com அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தொலைபேசி 04546 254510 எண் என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயனடையுமாறு தேனி கலெக்டர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.