தமிழக அரசின் ஊக்கத்தொகையுடன் இலவச மருத்துவ உதவியாளர் பயிற்சி
தமிழக அரசின் திறன் மேம்பாட்டுக்கழகம் சார்பில் மாணவிகளுக்கு ஊக்கத்தொகையுடன் கூடிய இலவச மருத்துவ பயிற்சி வகுப்புகள்.;
தமிழக அரசின் ஊக்கத்தொகையுடன் இலவச மருத்துவ உதவியாளர் படிப்பிற்கான சேர்க்கை தொடங்கி உள்ளது. இதில் சேர விரும்பும் மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழக அரசின் திறன் மேம்பாட்டு கழகம் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 படித்த மாணவிகளுக்கு இலவச மருத்துவ உதவியாளர் படிப்பு படிக்கவும், படிக்கும் காலத்தில் ஊக்கத்தொகை வழங்கவும் உதவிகள் செய்கிறது. 17 வயது முதல் 35 வயதிற்கு உட்பட்டவர்கள் இந்த படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம். தற்போது இந்த படிப்புகளுக்கான சேர்க்கை நடைபெறுகிறது. ஆறு மாதம் முதல் ஒரு வருடம் வரை சேரும் படிப்புகளுக்கு ஏற்ப பாடங்கள் நடத்தப்படுகின்றன.
பொதுசுகாதார உதவியாளர் (GEMERAL DUTY ASSISTANT), உணவுக்கலை உதவியாளர் (DIET ASSISTANT), அவசர சிகிச்சை உதவியாளர் (EMERGENCY MEDICAL TECHNICIAN), சர்க்கரைநோய் ஆலோசகர் (DIABETES EDUCATOR)ஆகிய படிப்புகளுக்கு இந்த ஊக்கத்தொகை வழங்குகிறது. இந்த படிப்புகளில் சேரும் மாணவிகளுக்கு இலவசமாக சீருடை, புத்தகப்பை வழங்கப்படும். ஊக்கத்தொகையும், அரசு சான்றிதழும் வழங்கப்படும். இதுநுாறு சதவீதம் வேலை வாய்ப்பு கொண்ட படிப்பு ஆகும்.
தேனியில் ஸ்ரீராம் நகர், லேக்ரோட்டில் உள்ள நலம் அகாடமியில் (நவீன மருத்துவமனையுடன் கூடியது) இந்த படிப்புகள் கற்றுத்தரப்படுகிறது. சேர விருப்பம் உள்ள மாணவிகள் 88700 07020, 1800-123-444-333 என்ற நம்பர்களில் போன் செய்து தங்களது படிப்பிற்கான சேர்க்கையினை உறுதி செய்யலாம். பணம் கொடுத்து உயர் படிப்பு படிக்க வசதியில்லாத ஏழை மாணவிகள் இந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என நலம் அகாடமி நிர்வாகம் தெரிவித்துள்ளது.