தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனையில் இலவச சிறுநீரக பரிசோதனை முகாம்
தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனையில் இலவச சிறுநீரக பரிசோதனை முகாம் நடைபெற்றது.;
கடந்த 46 ஆண்டுகளாக தேனியில் சிறப்பான மருத்துவசேவையாற்றி வருகின்ற தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனையில் இலவச சிறுநீரக பரிசோதனை முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் தற்போது டயாலசிஸ் செய்து வருபவர்கள், டயாலசிஸ் செய்யவேண்டிய நிலையில் இருப்பவர்கள், நாட்பட்ட சோர்வினால் அவதிப்படுபவர்கள், கை கால் வீக்கம் உள்ளவர்கள் மற்றும் பல்வேறு விதமான சிறுநீரக நோயால் பாதிப்பிற்குள்ளான ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பங்கேற்ற அனைவருக்கும் தேவையான முழு சோதனைகளும் இலவசமாக செய்யப்பட்டன. சிறுநீரக துறையில் அனுபவமிக்க டாக்டர். சரவணன் மருத்துவ ஆலோசனை வழங்கினார். தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனையில் 24 மணிநேரமும் டயாளிசிஸ் சிகிச்சை அளிக்கும் வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான ஏற்பாடுகளை மருத்துவமனை நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.