தேனியில் இலவச கருத்தரித்தல் பரிசோதனை முகாம்

தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனையில் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு இலவச கருத்தரித்தல் பரிசோதனை முகாம் நடைபெற்றது.;

Update: 2022-04-25 03:37 GMT

தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனையில் நடந்த இலவச கருத்தரித்தல் முகாமில் டாக்டர் காதர்ஷா தம்பதிகளுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கினார்.

தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனையில் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு இலவச கருத்தரித்தல் பரிசோதனை முகாம் நடைபெற்றது. செயற்கை கருத்தரித்தல் மைய மேலாளர் ஜேம்ஸ் தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் வாலி வரவேற்றார். மருத்துவமனை மேலாளர் சாந்தி குத்துவிளக்கு ஏற்றி முகாமினை தொடங்கி வைத்தார்.

குழந்தையின்மை பிரச்னை குறித்து டாக்டர் காதர்ஷா, டாக்டர் சுலேகா பரிசோதனை செய்து ஆலோசனைகளை வழங்கினார். 120க்கும் மேற்பட்ட தம்பதிகள் பங்கேற்று ஆலோசனை பெற்றனர். முகாமில் பங்கேற்றவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப்பட்டன.

Tags:    

Similar News