தேனி மாவட்டத்தில் முதியோர் உதவித்தொகை பெறுவதில் மோசடி கண்டு பிடிப்பு

தேனி மாவட்டத்தில் முதியோர் உதவித்தொகை பெறுபவர்களின் விவரங்களை அறிந்த விசாரணைக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2022-07-24 13:18 GMT

தேனி கலெக்டர் முரளீதரன், 'ஆதார் பதிவுகளை அடிப்படையாக வைத்து தேனி மாவட்டத்தில் விதிமீறி முதியோர் உதவித்தொகை பெறும் 7700 பயனாளிகளை வீடு, வீடாக சென்று ஆய்வு செய்ய குழுக்கள் அமைத்துள்ளார்.

இந்த குழுவினர் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்துள்ளது. தற்போது ஓய்வூதியம் பெறுவோர் தங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி கூட்டுறவு வேளாண் வங்கிகள், தேசிய வங்கிகளிலும் நகை அடகு வைத்து அதனை திருப்பி உள்ளனர். உஜ்வாலா திட்டத்தில் இரண்டு காஸ் சிலிண்டர் பெற்று பயனடைகின்றனர். பத்திரப்பதிவுத்துறை ஆவணங்களில் முதியோர் உதவி தொகை பெறுவோர் சொத்துக்கள் வாங்கியும், விற்றும் உள்ளதும் தெரியவந்துள்ளது. வசதி படைத்தவர்கள் முதியோர் உதவி தொகை பெறுகின்றனர். இந்த விவரங்களை அறிந்த விசாரணைக்குழு கலெக்டரிடம் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News