தேனி: மின்வாரிய உதவி பொறியாளர் உட்பட இருவர் மீது மோசடி வழக்கு

மின்வாரியத்தில் வேலை வாங்கித்தருவதாக கூறி, 9 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக, மின்வாரிய உதவி பொறியாளர் உட்பட 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

Update: 2022-03-21 03:00 GMT

தேனி மாவட்டம்,  காமயகவுண்டன்பட்டியை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவவீரர் குணசேகரன். இவர் தேவதானப்பட்டியில் கோயில் பூஜாரியாக உள்ளார். இவர் சோழவந்தானில் மின்வாரிய உதவிப்பொறியாளராக பணிபுரியும் சத்யாவிடம்,  தனது மகனுக்கு மின்வாரியத்தில் வேலை வாங்கித்தர 2 லட்சம் ரூபாய் கொடுத்தார்.

மேலும் ஏழு பேரிடம் தலா ஒருலட்சம் ரூபாய் வாங்கிக் கொடுத்தார். இந்த பணத்தை இவருடன் பணியாற்றும் ராஜலிங்கம் என்பவர் மூலம் சத்யாவிடம் கொடுத்தார். பணத்தை வாங்கியவர்கள் வேலை வாங்கித்தரவில்லை. இதனால் பிரச்னையாகி விடும் என கருதி ராஜலிங்கம் தலைமறைவாகி விட்டார். குணசேகரன் கொடுத்த புகாரில் தேனி குற்றப்பிரிவு போலீசார் சத்யா, குணசேகரன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News