லஞ்சம் வாங்கிய முன்னாள் பஞ்சாயத்து தலைவிக்கு 2 ஆண்டு சிறை தண்டனை
Bribery Case - லஞ்சம் வாங்கிய முன்னாள் பஞ்சாயத்து தலைவிக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து தேனி கோர்ட்டு தீர்ப்பளித்தது.
Bribery Case - தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாலுகா பொட்டிப்புரம் கிராம ஊராட்சி தலைவராக இருந்தவர் சந்திரா. இந்த கிராமத்திற்கு உட்பட்ட புதுக்கோட்டையை சேர்ந்த செல்வராஜ் (வயது 53 )என்பவர் குடிநீர் இணைப்பு கேட்டு விண்ணப்பித்து இருந்தார். குடிநீர் இணைப்பு வழங்க சந்திரா 3 ஆயிரம் லஞ்சம் வேண்டும் என கேட்டார்.செல்வராஜ் இது குறித்து தேனி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் முத்துராஜ் தலைமையிலான போலீசார் செல்வராஜிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை கொடுத்தார்.
இந்த பணத்தை லஞ்சமாக வாங்கிய ஊராட்சி தலைவி சந்திராவை 2012 செப்டம்பர் 6ம் தேதி லஞ்ச ஒழிப்பு தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை தேனி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்தது. நீதிபதி கோபிநாதன் முன்னாள் ஊராட்சி தலைவியான சந்திராவிற்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை, 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2