மேகமலை வனப்பகுதியில் கால்நடைகளுக்குப் பரவும் கோமாரி நோய்
மேகமலையில் கோமாரி நோய் காட்டு மாடுகளுக்கு பரவுவதை தடுக்கதீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியறுத்தல்
தேனி மாவட்டம் மேகமலை வனப்பகுதியில் கோமாரி நோய் பரவி வருவதால் காட்டு மாடுகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தேனி மாவட்டம், மேகமலை வனப்பகுதியிலும், பெரியகுளம், சோத்துப்பாறை, மஞ்சளாறு, கும்பக்கரை, போடி, தேவாரம், கம்பம், குமுளி வனப்பகுதிகளிலும் ஏராளமான காட்டு மாடுகள் உள்ளன.இந்நிலையில் மேகமலை வனப்பகுதியில் கோமாரி நோய் தாக்கி காட்டுமாடு ஒன்று உயிரிழந்து உள்ளது. இதனால் இந்த நோய் இதர பகுதிகளுக்கும் பரவும் அபாயம் உள்ளது. எனவே வனத்துறையும், கால்நடைத்துறையும் இணைந்து தீவிர நடவடிக்கை மேற்கொண்டு கோமாரிநோயினை தடுக்க வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.