வேளாண் விளைபொருள்களுக்கு செஸ் வரி ரத்து செய்யப்படுமா?

The Theni Chamber of Commerce has sent petition to repeal the chess tax levied on agricultural products

Update: 2022-06-14 07:15 GMT

தேனி சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் கே.எஸ்.கே.,நடேசன்.

 வேளாண் விளைபொருட்களான தானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் உட்பட பல்வேறு பொருட்களுக்கு தமிழக அரசு  விதித்துள்ள்ள ஒரு சதவீதம் செஸ் வரியை  ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து தேனி சேம்பர் ஆப்காமர்ஸ் தலைவர் கே.எஸ்.கே.,நடேசன் தமிழக முதல்வருக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியுள்ளதாவது: வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மூலம் நடைபெறும் வணிகத்திற்கு மட்டுமே செஸ்வரி வசூலிக்கப்பட வேண்டும். ஆனால் முதன் முறையாக வெளிமார்க்கெட்டில் நடைபெறும் வணிகத்திற்கும் செஸ் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். நமது பக்கத்து மாநிலங்கள் எதிலும் வெளிமார்க் கெட்டில் நடைபெறும் வணிகத்திற்கு செஸ் வரி கிடையாது. தவிர அங்கெல்லாம் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் மிகவும் வலுவான வசதியான உள்கட்டமைப்புகளுடன் உள்ளன. வணிகமும் சிறப்பாக நடக்கிறது.

தமிழகத்தில் சேலம், தர்மபுரி, நாமக்கல், விழுப்புரம் மாவட்டங்களை தவிர வேறு எந்த மாவட்டத்திலும் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் உள்கட்டமைப்பு வசதிகள் முறையாக இல்லை. தவிர தமிழகத்தில் விளைச்சல் மிகவும் குறைவாக உள்ளது. தமிழகத்திற்கு தேவையான உணவுப்பொருட்கள் உட்பட அத்தனையும் வெளிமாநிலங்களில் இருந்தே வர வேண்டும். இந்த பொருட்கள் தமிழகத்திற்குள் நுழைந்ததும் அதற்கும் செஸ் வரி விதிக்கப்படுகிறது.இந்த செஸ்வரி மக்களை கடுமையாக பாதிக்கும். எனவே தமிழக முதல்வர் இந்த விஷயத்தில் தலையிட்டு, வேளாண்மை விளை பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள செஸ் வரியினை ரத்து செய்ய வேண்டும் என்று  அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News