தேனி மாவட்டத்தில் மழை நின்றாலும் வெள்ள அபாயம் நீடிப்பு

தேனி மாவட்டத்தில் மழை நின்றாலும், வெள்ள அ பாயம் நீடிக்கிறது; மக்கள் நீர்நிலைகளில் இறங்க வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-12-28 02:30 GMT

மேகமலை சின்னசுருளி அருவியில் கொட்டுது தண்ணீர்.(பைல் படம்)

தேனி மாவட்டத்தில் இந்த ஆண்டு வழக்கத்தை விட 70 சதவீதம் மழை அதிகம் பெய்துள்ளது. இதனால் அனைத்து கண்மாய்கள், குளங்கள், அணைகள் நிரம்பி உள்ளன. ஆறுகள், அருவிகளில் நீர் வரத்து இருந்து கொண்டே உள்ளது. கடந்த 15 நாட்களை கடந்தும் மழை இல்லை. பகலில் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே உள்ளது.

இப்போது பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாலும், பலரும் குளிக்க, மீன்பிடிக்க ஆறுகள், குளங்கள், கண்மாய்கள், அருவிகளுக்கு செல்கின்றனர். இப்படி யாரும் செல்ல வேண்டாம். மழை நின்றாலும் அனைத்து ஆறுகளிலும் நீர் வரத்து உள்ளது. அருவிகளிலும் நீர் வரத்து அதிகம் உள்ளது. கண்மாய்கள், குளங்கள், அணைகள் நிரம்பி வழிகின்றன. வெள்ள அபாயம் நீடிக்கவே செய்கிறது. எனவே உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்ளுங்கள். யாரும் குளிக்கவோ, மீன் பிடிக்கவோ நீ்ர் நிலைகளில் இறங்க வேண்டாம் என,  தேனி மாவட்ட நி்ர்வாகம் மக்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.

Tags:    

Similar News