கரையில் நீர்க்கசிவு ஏற்பட்டதும் துரித நடவடிக்கை: தப்பியது கண்மாய்

போடி அருகே, கரையில் நீர்க்கசிவு ஏற்பட்டதுமே, அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுத்து கண்மாயினை பாதுகாத்தனர்.;

Update: 2021-12-06 12:45 GMT

போடி நாட்டான்மைக்காரர் கண்மாய் கரையில்,  கசிவு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறும் பகுதியை அடைக்கும் பணி நடந்தது.

தேனி மாவட்டம், போடி நாட்டான்மைக்காரர் கண்மாய்,  இன்று அதிகாலை நிரம்பி வழிந்தது. கண்மாய் நிரம்பியதும் கரையின் ஒரு பகுதியில்,  நீர்க்கசிவு ஏற்பட்டு தண்ணீர் சிலமலை கிராமம் செல்லும் ராணிமங்கம்மாள் ரோட்டில் வந்தது. ரெங்கனாதபுரம் கிராமத்தில் பல தெருக்களில் தண்ணீர் புகுந்தது.

தகவல் அறிந்த பேரூராட்சி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் ஜெ.சி.பி. உட்பட பல தேவையான எந்திரங்களை கொண்டு வந்து கரையினை உடனடியாக பலப்படுத்தினர். இதனால் கண்மாய் உடைவது தடுக்கப்பட்டு, பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. கண்மாயும் பாதுகாக்கப்பட்டது என விவசாயிகள் பாராட்டு தெரிவித்தனர்.

Tags:    

Similar News