ஐந்து மாதங்களுக்கு பின்னர் தேனி மாவட்டத்தில் பரவலாக பெய்த மழை
ஐந்து மாதங்களுக்கு பின்னர் தேனி மாவட்டத்தில் நேற்று பல இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது.;
கடந்த ஐந்து மாதங்களுக்கு பின்னர் தேனி மாவட்டத்தில் நேற்று பரவலான மழை பெய்துள்ளது. இன்று காலை 6 மணி நிலவரப்படி ஆண்டிப்பட்டியில் 31 மி.மீ., அரண்மனைப்புதுாரில் 6.6 மி.மீ., வீரபாண்டியில் 14 மி.மீ., போடியில் 20.6 மீட்டர், கூடலுாரில் 9.6 மீட்டர், மஞ்சளாறில் 4 மி.மீ., பெரியகுளத்தில் 4 மி.மீ., பெரியாறு அணையில் 6.2 மி.மீ., தேக்கடியில் 3.4 மி.மீ., சோத்துப்பாறையில் 3 மி.மீ., உத்தமபாளையத்தில் 4.3 மி.மீ., வைகை அணையில் 4 மி.மீ., மழை பதிவானது. இன்றும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால் மழை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.