போடி மீனாட்சிபுரம் கண்மாயில் திருட்டுத்தனமாக மீன் பிடிப்பதாக புகார்

போடி மீனாட்சிபுரம் கண்மாயில் மீன்பிடித்த கும்பல், போலீசாரை கண்டதும் தப்பி ஓடி விட்டதாக புகார் கிளம்பி உள்ளது.

Update: 2021-12-28 02:00 GMT

சித்தரிப்பு காட்சி

தேனி மாவட்டத்திலேயே மிகப்பெரிய கண்மாய்,  போடி மீனாட்சிபுரம் கண்மாய். இதன் நீர் தேக்கபரப்பு மட்டும், ஆயிரம் ஏக்கரை தாண்டும். ஆண்டு முழுவதும் இங்கு மீன் பிடிக்கப்பட்டு விற்கப்படும். இதற்கென சில நடைமுறைகள் உள்ளன.

தற்போது கண்மாய் முழுமையாக நிரம்பி உள்ளது. இதில் திருட்டுத்தனமாக பலர் மீன்பிடித்து விற்பனை செய்வதாக கோடாங்கிபட்டி மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் தமிழரசன்,  போடி தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக இரவு நேர தேடலுக்கு சென்ற போது, மீன் பிடித்துக் கொண்டிருந்த சிலர் தப்பி ஓடி விட்டதாக போலீசார் தெரிவித்தனர். இது குறித்து விசாரணை நடக்கிறது. 

Tags:    

Similar News