பல நாட்களாக பற்றி எரியும் வீரப்ப அய்யனார் கோயில் மலை வனப்பகுதி

தேனி வீரப்பஅய்யனார் கோயில் அமைந்திருக்கும் மேற்கு தொடர்ச்சி மலையில் ஒரு மாதத்திற்கும் மேலாக தீ பற்றி எரிந்து வருகிறது.

Update: 2022-04-05 07:00 GMT

பல நாட்களாக பற்றி எரிகிறது தேனி வீரப்பஅய்யனார் கோயில் மலை.

 குமுளியில் இருந்து கம்பம், தேவாரம், போடி, தேனி, பெரியகுளம், கொடைக்கானல் என இந்த மலைத்தொடர் நீண்டு கொண்டே செல்கிறது. இந்த மலைத்தொடர் போடி, தேனி, பெரியகுளம், கொடைக்கானல் பகுதிகளில் கூடுதல் பசுமையுடன் காணப்படும். தேனி பகுதியில் இந்த மலை மிகுந்த பசுமையுடன் காணப்படும்.

தேனியில் இருந்து ஆறு கி.மீ., தொலைவில் உள்ள வீரப்பஅய்யனார் கோயில் மலை. இப்படிப்பட்ட பசுமை படர்ந்த பகுதிகளே கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பற்றி எரிகின்றன. ஓரு மாதமும் தொடர்ந்து எரியாவிட்டாலும், இடையில் ஓரிரு நாட்கள் இடைவெளி விட்டு, விட்டு மீண்டும் தீ பற்றிக் கொள்கின்றன.

இதனால் வனவளங்கள் மட்டுமின்றி, வனவிலங்குகளும் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. பல நேரங்களில் வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் வந்து விடுகின்றன. வனத்துறை தீயை அணைக்கவும், மீண்டும் தீ பிடிக்காமல் தடுக்கவும் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், வனஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News