தென்னை மரங்களை காட்டுயானைக்கூட்டம் சாய்த்ததால் விவசாயிகள் வேதனை
கூடலுாரில் 9 யானைகள் கொண்ட கூட்டம் தென்னந்தோப்புக்குள் புகுந்து 80 மரங்களை சாய்த்ததால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர்;
கூடலுாரில் தென்னந்தோப்புக்குள் புகுந்து 80க்கும் மேற்பட்ட மரங்களை காட்டுயானைக்கூட்டம் சாய்த்தது.
கூடலுார், வெட்டுக்காடு, கடமான்குளம் வனப்பகுதியில் ஒரே நேரத்தில் 9 யானைகள் கொண்ட கூட்டம் விளைநிலங்களுக்குள் புகுந்தது. சேதுபதி என்பவரது தோட்டத்திற்குள் புகுந்து 80க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை வேருடன் சாய்த்தது. வனத்துறை அதிகாரிகள் இந்த பகுதிகளை பார்வையிட்டனர். பின்னர் யானைகள் விளைநிலங்களுக்குள் புகுந்து விடுவதைத் தடுக்க அகழி அமைத்து தருவதாக விவசாயிகளுக்கு உறுதி அளித்தனர்.