தேனி மாவட்டத்தில் நாளை விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
Public Grievance Meaning- தேனி கலெக்டர் அலுவலகத்தில் நாளை விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் முரளீதரன் தலைமையில் நடக்கிறது.
Public Grievance Meaning- தேனி மாவட்டத்தைச் சார்ந்த விவசாய சங்க பிரதிநிதிகள் அந்தந்த வட்டாரத்தில் உள்ள வேளாண்மை சம்பந்தமான திட்டங்கள் மற்றும் குறைகளை வருகின்ற 29.07.2022 வெள்ளிக் கிழமை அன்று நடைபெறவிருக்கும் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு தெரிவித்து பயன் பெறலாம்.
மேலும் தங்களது குறைகளை மனுக்களாக குறை தீர் கூட்டத்தில் வழங்கி உடனடி தீர்வுகளையும் பெற்றிடலாம். விவசாயிகளிடம் பெறப்படும் மனுக்கள் மீது கண்காணித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மனுக்களை அனுப்பி உரிய நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படும். என தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் க.வீ.முரளீதரன் தெரிவித்துள்ளார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2