தேனி கலெக்டர் அலுவலகத்தில் வரும் 26ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
தேனி கலெக்டர் அலுவலகத்தில் வரும் 26ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.;
வரும் நவம்பர் மாதம் 26ம் தேதி வெள்ளிக்கிழமை தேனி கலெக்டர் முரளீதரன் தலைமையில் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தேனி மாவட்ட வி வசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது.
காலை 11 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்தில் விவசாயிகள் திரளாக பங்கேற்று தங்கள் குறைகளை தெரிவித்து தீர்வு காண வேண்டும் என மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.