முல்லை பெரியாறு அணை கட்டுப்பாட்டை தேனி கலெக்டரிடம் ஒப்படைக்க வேண்டும்

முல்லைப்பெரியாறு அணை கட்டுப்பாட்டை முழுமையாக தேனி கலெக்டரின் நேரடி பொறுப்பில் ஒப்படைக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை

Update: 2022-02-24 15:30 GMT

முல்லை பெரியாறு அணை (பைல் படம்)

முல்லைப்பெரியாறு அணை கட்டுப்பாட்டை முழுமையாக தேனி கலெக்டரின் நேரடி பொறுப்பில் ஒப்படைக்க வேண்டும் என ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்க நிர்வாகிகள் வலியுறுத்துகின்றனர்.

இது குறித்து தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமனாதபுரம் மாவட்ட விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில் எங்களின் விரிவான செயல்திட்டங்களை முழுமையாக திட்டமிட்டுள்ளோம். இனி மேல் இந்த செயல் திட்டங்களின் அடிப்படையில் செயல்படுவோம். எங்கள் திட்டங்கள் குறித்து தற்போது அறிவித்துள்ளோம். அதன்படி முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக நீண்டுகொண்டே இருக்கும் நீர்ச்சிக்கலுக்கு தெளிவான முடிவை வரையறுத்து அடுத்த கட்டத்தை நோக்கி அதை நகர்த்துவது...

பேபி அணையை பலப்படுத்துவதற்கு தடையாக உள்ள இருபத்திமூன்று மரங்களை வெட்டுவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துவது.2006 மற்றும் 2014 ஆகிய இரண்டு ஆண்டுகளில், உச்ச நீதிமன்றம் முல்லைப் பெரியாறு அணை குறித்து வழங்கியுள்ள தெளிவான வழிகாட்டுதல்களின் அடிப்படையில் அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதற்கு பாடுபடுவது.

மாநில அரசின் ஒத்துழைப்பின்றி மத்திய அரசு செயல்படுத்த துடிக்கும் நியூட்ரினோ ஆய்வகம் குறித்து, உத்தமபாளையம் மற்றும் போடி ஆகிய இரண்டு தாலுகாக்களிலும் உள்ள கிராமங்கள் தோறும் சென்று மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது.தேவாரம் சுற்று வட்டார கிராம மக்களின் நீண்டகால தேவையாக இருந்து வரும் சாக்கலூத்து மெட்டு வனச் சாலை அமைப்பது தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள்எடுப்பது.

தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபட்டு வரும் கொட்டகுடி பஞ்சாயத்தை டிஸ்மிஸ் செய்வது தொடர்பாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து முறையிடுவது.கனரக வாகனங்களில் லோடுகளை ஏற்றிக்கொண்டு லோயர்கேம்ப் வழியாக குமுளி செல்லும் வாகனங்களை தடை செய்வது தொடர்பாக நெடுஞ்சாலை துறை அதிகாரிகளை தொடர்பு கொள்வது.

-கொழுக்குமலை முதல் குரங்கணி வரை உள்ள மண் சாலையை தார்ச்சாலையாக மாற்றுவதற்கு மாவட்ட ஆட்சியர் மூலம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவது-போடி வனச்சரகத்திற்குட்பட்ட டாப்ஸ்டேசன் வன எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக குடில்கள் நடத்தி சுற்றுலாப்பயணிகளை ஆபத்தில் தள்ளும் அயோக்கியர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக தேனி மாவட்ட முதன்மை வன அலுவலரை சந்தித்து முறையிடுவது.லோயர் கேம்பில் இருந்து குழாய்கள் மூலமாக மதுரைக்கு குடி தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்திற்கான மாற்று திட்டத்தை முன் மொழிவது.

தேனி திண்டுக்கல் மதுரை சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களிலும் முறையாக அமைக்க வேண்டிய இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைப்பது தொடர்பாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணியை சந்தித்து முறையிடுவது.

எல்லப்பட்டி சிட்டிவாரை செண்டுவாரை உள்ளிட்ட இடுக்கி மாவட்ட பகுதிகளுக்கு அருகே இருக்கும் தமிழக வனப்பகுதிகளை ட்ரோன் மூலமாக கண்காணிப்பது தொடர்பாக மதுரை மண்டல முதன்மை வனப்பாதுகாவலர் அவர்களை நேரில் சந்தித்து மனு அளிப்பது.அடுத்தடுத்து நடைபெறவிருக்கும் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டங்களை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருக்கும் கூட்ட அரங்கில் நடத்துவது தொடர்பாக ஐந்து மாவட்ட ஆட்சியர் களையும் சந்திப்பது.

முல்லைப் பெரியாறு அணையை தேனி மாவட்ட ஆட்சியரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவது தொடர்பாக தொடர் போராட்டங்களை நடத்துவது.-ஆர்.எஸ். மங்கலம் பெரிய கண்மாயை தூர்வாருவது தொடர்பாக மாவட்ட அமைச்சர்கள் பெரிய கருப்பன் மற்றும் ராஜகண்ணப்பன் ஆகிய இருவரையும் நேரில் சந்தித்து மனு அளிப்பது.

-சிவகங்கை மாவட்டத்தில் பெரியாறு பாசனத்தில் இருந்து விடுபட்டு இருக்கும் கீழப்பூங்குடி பிறவலூர் ஒக்கூர் உள்ளிட்ட 11 கிராமங்களை மறுபடியும் பெரியாறு பாசனத்தில் சேர்க்கச் சொல்லி காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் பொறியாளர் சுப்பிரமணியத்தை நேரில் சந்தித்து முறையிடுவது.குரங்கணி யிலிருந்து முதுவாக்குடி வரை செல்லும் சாலையை முறையாக அமைப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியரை சந்திப்பது.உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுடன் எங்களுடைய அடுத்த கட்ட பயணம் தொடர்கிறது என்று நிர்வாகிகள் கூறினர்.

Tags:    

Similar News