பெரியகுளத்தில் இறந்த விளையாட்டு வீரர் கண்தானம்
பெரியகுளத்தில் இறந்த விளையாட்டு வீரர் கண்கள் தானமாக பெறப்பட்டது.;
தேனி மாவட்டம், பெரியகுளம் தெற்கு அக்ரஹாரத்தை சேர்ந்த பேட்மிட்டன் விளையாட்டு வீரர் ராதாகிருஷ்ணன், (வயது நாற்பத்தி ஒன்பது). இவர், வாழும் போது கண்தானம் குறித்த விழிப்புணர்வு செய்து வந்தார். இவர் ஏற்படுத்திய விழிப்புணர்வு காரணமாக பலர் கண்தானம் செய்துள்ளனர்.
இந்நிலையில், ராதாகிருஷ்ணன் திடீரென நெஞ்சு வலியால் இறந்தார். உடனடியாக தேனி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு தகவல் தரப்பட்டது. அக்குழுவினர் வந்து இறந்த ராதாகிருஷ்ணனின் இரண்டு கண்களையும் தானமாக பெற்றனர். இதன் மூலம் இருவருக்கு கண் பார்வை கிடைக்கும் என டாக்டர்கள் தெரிவித்தனர்.