தேனியில் காலாவதியான 120 டன் உணவுப்பொருட்கள் அழிப்பு

தேனியில் காலாவதியான 120 டன் உணவுப்பொருட்களை உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அழித்தனர்.

Update: 2022-03-17 04:15 GMT

தேனி மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் ராகவன், வட்டார அலுவலர்கள் சக்தீஸ்வரன், மதன், சரண்யா, ஜவகர், சுரேஷ் கண்ணன் உள்ளிட்ட அலுவலர்கள் குழுவினர் தேனியில் சூப்பர் மார்க்கெட், மளிகை கடைகள், பால் விற்பனை நிலையங்கள், ஓட்டல்களில் சோதனை செய்தனர்.

அங்கு இருந்த காலாவதியான அப்பளம், பால், பாக்கெட் பொருட்கள், தடைசெய்யப்பட்ட கலர் பயன்படுத்தப்பட்டு தயாரிக்கப்பட்ட உலர் திண்பண்டங்கள் உள்ளிட்ட பொருட்களை சேகரித்து அழித்தனர். இவற்றின் எடை நுாற்றி இருபது கிலோவை தாண்டும். இவற்றை வைத்திருந்த கடைகள், சூப்பர் மார்க்கெட் உரிமையாளர்கள் எச்சரிக்கப்பட்டதாக, அவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News