தேனி மாவட்டத்தில் இ.பி.எஸ். ஆதரவு அ.தி.மு.க.விற்கு முதல் வெற்றி
அ.தி.மு.க.,வின் பொதுச் செயலாளராக இ.பி.எஸ். தேர்வானதும் அவரது ஆதரவாளருக்கு தேனி மாவட்டத்தில் முதல் வெற்றி கிடைத்துள்ளது.
அ.தி.மு.க.,வில் பொதுக்குழு பிரச்சினை நடந்து கொண்டிருந்த போது, தேனி மாவட்டம், தேனி அருகே உள்ள வடபுதுப்பட்டி கிராம ஊராட்சியில் தலைவர் தேர்தல் களைகட்டி இருந்தது. இந்த தேர்தல் பிரச்சார நெருக்கடியிலும், தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அன்னபிரகாஷை (அ.தி.மு.க., ஒன்றிய செயலாளராக இருந்தவர்) இ.பி.எஸ்., சந்தித்து ஆதரவும், வாழ்த்தும் தெரிவித்தார்.
இ.பி.எஸ்., அ.தி.மு.க.,வின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வானதும் வடபுதுப்பட்டி பஞ்சாயத்தில் இனிப்பு வழங்கி கொண்டாடினார். மறுநாளே ஒட்டு எண்ணிக்கை நடந்தது. அதில் 1800 ஓட்டுகள் வித்தியாசத்தில் அபாரமான வெற்றி பெற்றார். இ.பி.எஸ்., கட்சியின் ஒற்றைத்தலைமையாக பொறுப்பேற்றதும், அவரது ஆதரவாளர் பெரும்பான்மை ஒட்டுக்களுடன் வெற்றி பெற்று பஞ்சாயத்து தலைவர் பதவியை கைப்பற்றியது அ.தி.மு.க.,வினருக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.