என்.எஸ்.பொறியியல் கல்லுாரியில் தொழில்முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கு

தேனி என்.எஸ்., பொறியியல் கல்லுாரியில் தொழில்முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.;

Update: 2021-12-14 13:52 GMT
தேனி என்.எஸ்., கல்லுாரியில் நடந்த விழிப்புணர்வு கருத்தரங்கில் மதுரை தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் பயிற்சியாளர் ராமச்சந்திரன் பேசினார்.

தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் தொழில்நுட்ப கல்லுாரியில் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி நடந்தது.

தொழில்முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் இந்த பயிற்சி நடத்தப்பட்டது. கல்லுாரி செயலாளர் காசிபிரபு தலைமை வகித்தார். இணைச் செயலாளர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார். கல்லுாரியின் தொழில்முனைவோர் மேம்பாட்டு செல்லின் ஒருங்கிணைப்பாளர் அறிவழகன் வரவேற்றார். முதல்வர் மதளை சுந்தரம் வாழ்த்தி பேசினார்.

மதுரை தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் பயிற்சியாளர் ராமச்சந்திரன் பேசினார். விழிப்புணர்வு பயிற்சியில் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை தலைவர் முருகன், பொதுச்செயலாளர் ராஜ்மோகன், பொருளாளர் பழனியப்பன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News