உத்தமபாளையம் அருகே மின்சாரம் பாய்ந்து பலியான பொறியாளர்
உத்தமபாளையம் அருகே, வீட்டில் துணி தேய்க்கும் போது, மின்சாரம் பாய்ந்து பொறியாளர் பலியானார்.;
தேனி மாவட்டம், உத்தமபாளையம் தென்நகர் காலனியை சேர்ந்தவர் முத்துக்குமார், 42. பொறியியல் பட்டதாரியான இவர், சுய தொழில் செய்து வந்தார். இவர் குழந்தைகளுக்கான பள்ளி சீருடையை அயர்ன்பாக்ஸ் மூலம் தேய்த்தார்.
துணிகளுக்கு தண்ணீர் தெளிக்கும் போது அயர்ன் பாக்சில் மின்கசிவு ஏற்பட்டு மின்சாரம் தாக்கியது. இதில் முத்துக்குமார் வீட்டிலேயே பலியானார். உத்தமபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.