ஆண்டிப்பட்டி அருகே ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்ட கண்மாய்
ஆண்டிபட்டி அருகே புலிமான்கோம்பை கண்மாய் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் இருந்து மீட்கப்பட்டது.;
ஆண்டி்பட்டி புலிமான் கோம்பை கண்மாய் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது.
கண்மாய்கள் உள்ளிட்ட நீர்நிலைகளின் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து தேனி மாவட்டத்தில் முதல் நடவடிக்கையாக புலிமான்கோம்பை கிராமத்தில் கண்மாய் ஆக்கிரமி்ப்புகள் அகற்றப்பட்டது.
மீண்டும் ஆக்கிரமிப்பு ஏற்படாத வகையில் பாதுகாப்பு மற்றும் தடுப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆண்டிபட்டி வருவாய்த்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறையினர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர்.