ஆண்டிபட்டி பகுதியில் 80 அடி கிணற்றில் விழுந்த கடமான் உயிருடன் மீட்பு

ஆண்டிபட்டி பகுதியில் கிணற்றில் தவறி விழுந்த 200 கிலோ எடையுள்ள கடமானை, தீயணைப்பு படையினர் மீட்டு வனத்தில் விட்டனர்.

Update: 2022-01-22 12:30 GMT

கிணற்றில் விழுந்த கடமானை தீயணைப்பு படையினர் கயிறு கட்டி மீட்டனர்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே ஜி.உசிலம்பட்டியில் சுந்தர்ராஜ் என்பவரது தோட்டத்தில்,  80 அடி ஆழம் உள்ள கிணறு உள்ளது. இந்த கிணற்றில்,  தண்ணீர் இல்லை. இந்த கிணற்றுக்குள் கடமான் ஒன்று தவறி விழுந்தது. இதனை கவனித்த விவசாய பணியாளர்கள், தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

தீயணைப்பு நிலைய அலுவலர் கணேசன் தலைமையில் வந்த படையினர்,  கிணற்றுக்குள் இறங்கி 200 கிலோ எடையுள்ள அந்த கடமானை,  காயம் ஏதுமின்றி உயிருடன் மீட்டனர். பின்னர்,  வன அலுவலர் செல்வராஜிடம் ஒப்படைத்தனர். வன அலுவலர் குழு,  அந்த மானை மீண்டும் பத்திரமாக வனத்திற்குள் விட்டது.

Tags:    

Similar News