தேனி நாடார் உறவின் முறை சங்க தேர்தல் ராஜ்மோகன் அணியினர் அமோக வெற்றி

தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை சங்க தேர்தலில் தலைவர் ராஜ்மோகன் அணியில் போட்டியிட்ட 15 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

Update: 2022-05-29 05:16 GMT

தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை சங்க தேர்தலில் வெற்றி பெற்ற புதிய நிர்வாகிகள் இன்று அதிகாலை பொறுப்பேற்றுக் கொண்டனர்.

தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை சங்கம் தமிழக அளவில் நாடார் சங்கங்களில் மூன்றாவது பெரிய சங்கமாகவும், ஒரே ஊரில் செயல்படும் சங்கத்தில் முதலாவது பெரிய சங்கமாகவும் இருந்து வருகிறது.

15 கல்வி நிறுவனங்கள் உட்பட 25 நிறுவனங்களை இந்த சங்கம் இயக்கி வருகிறது. பல ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்களையும் நிர்வகித்து வருகிறது. ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கும் ஒருமுறை சங்க நிர்வாகிகள் தேர்தல் வரும்.  இந்த முறை மூன்று அணிகளாக போட்டியிட்டனர். ராஜ்மோகன் அணியில் 16 பேர் போட்டியிட்டனர். இந்த அணியில் தலைவராக டி.ராஜ்மோகன், துணைத்தலைவராக பி.பி.கணேஷ், பொருளாளராக பழனியப்பன் ஆகியோர்  வெற்றி பெற்றனர். பொதுச் செயலாளர் பதவிக்கு மட்டும் எதிர் அணியில் போட்டியிட்ட ஆனந்தவேல் வெற்றி பெற்றார்.

ராஜ்மோகன் அணியில் போட்டியிட்ட ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்கள் பி.எம்.பி.,அருள்பிரகாசம், எ.ஜி.எஸ்.,தர்மராஜன், கே.ஞானப்பிரகாசம், ஜி.என்.ஜவகர், ஆர்.டி.ஜவகர், ஏ.எஸ்.ஜீவகன், கே.கே.ஜெயராமன், கே.காளிமுத்து, பி.கண்ணாயிரம், கே.கே.சேகர், பி.ராமச்சந்திரன், கே.விஜயகுமார் ஆகிய 12 பேரும் வெற்றி பெற்றனர். இதன் மூலம் ராஜ்மோகன் அணியினர் நி்ர்வாகத்தை கைப்பற்றி உள்ளனர். வெற்றி பெற்ற நிர்வாகிகளுக்கு தமிழக அளவில் உள்ள நிர்வாகிகள் வாழத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

Similar News