இப்படி ஒரு சேதி பரவுது இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி..

அண்ணா தி.மு.க., பொதுக்குழு தீர்மானங்களை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது..

Update: 2022-07-17 05:11 GMT

கடந்த 11-ந்தேதி அண்ணா தி.மு.கவின் சிறப்பு பொதுக்கழு நடந்தது. அதில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கட்சியின் சட்டவிதிகளில் ஒருசில திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. கட்சியில் இருந்த ஒருங்கிணைப்பாளர். இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் நீக்கப்பட்டன. பதிலாக பொதுச்செயலாளர், துணை பொதுச்செயலாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். பொருளாளர் பொறுப்பில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டு திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டார். பொதுக்குழு தீர்மானங்களையும், சட்டதிருத்தங்களையும், 98 சதவீத பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்களின் உறுதிமொழி பத்திரங்களை எடப்பாடி பழனிசாமி தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்தார். பொதுக்குழுவுக்தே வராத ஓ.பன்னீர்செல்வம், மெஜாரிட்டி பொதுக்குழு முடிவுகளை ஏற்கக்கூடாது என்று கடிதம் அளித்தார். இருதரப்பும் தாக்கல் செய்த ஆவணங்களை தேர்தல் ஆணையம் தீவிரமாக பரிசீலித்து பன்னீர்செல்வத்தின் ஆட்சேபணையை தள்ளுபடி செய்து விட்டதாத தகவல்கள் தெரிவிக்கின்றன. அனைத்திந்திய அண்ணா தி.மு.க பொதுக்குழு தீர்மானங்களுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளிக்க முடிவு எடுத்துள்ளது. இதுதொடர்பான அங்கீகார கடிதம் வரும் 18-ந்தேதி ஜனாதிபதி தேர்தல் வாக்குபதிவுக்குப்பின் கட்சி தலைமைக்கு அனுப்பப்படும் என்று தெரிகிறது.

Tags:    

Similar News