தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லுாரியில் உலக பூமி தினநாள்
தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் தொழில்நுட்பக் கல்லுாரியில் உலக பூமி தின நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.;
தேனியில் உள்ள, நாடார் சரஸ்வதி பொறியியல் தொழில்நுட்பக் கல்லுாரியில், உலக பூமி தின நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லுாரியின் நாட்டு நலப்பணித்திட்டம், உலக சுற்றுச்சூழல் அமைப்பின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சிக்கு என்.எஸ்.எஸ். திட்ட ஒருங்கிணைப்பாளர் பிரதீப்குமார் வரவேற்றார்.
கல்லுாரியின் துணை முதல்வர் மாதவன், வேலை வாய்ப்பு அலுவலர் கார்த்திகேயன் வாழ்த்தி பேசினர். தேனி மேலப்பேட்டைஇந்து நாடார் உறவின்முறை தலைவர் முருகன், பொதுச் செயலாளர் ராஜ்மோகன், பொருளாளர் பழனியப்பன், கல்லுாரி செயலாளர் காசிபிரபு, இணைச் செயலாளர் ராஜ்குமார், முதல்வர் மதளைசுந்தரம் உட்பட பலர் பங்கேற்று மரக்கன்றுகள் நட்டனர். ஏற்பாடுகளை என்.எஸ்.எஸ். ஒருங்கிணைப்பாளர் வி.நாகராஜன், பசுமை சுற்றுச்சூழல் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் நாகரத்தினம் உட்பட பலர் செய்திருந்தினர்.