அதிகாலையில் கொட்டித்தீர்த்த பலத்த மழை: தேனி வீரபாண்டியில் 119 மி.மீ., மழை பதிவு

தேனி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை பலத்த மழை பெய்தது. வீரபாண்டியில் 119 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.

Update: 2021-11-30 02:56 GMT

பைல் படம்.

தேனி மாவட்டத்தில் நேற்று காலை பலத்த மழை பெய்ததால் பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. காலையில் பெய்த மழை பகலில் குறைந்தது. மீண்டும் நேற்று இரவு தொடங்கி விடிய, விடிய மழை கொட்டித்தீர்த்தது.

இன்று காலை 6 மணி நிலவரப்படி தேனி வீரபாண்டியில் 119 மி.மீ., மழை பதிவானது. உத்தமபாளையத்தில் 63.9 மி.மீ., மழை பெய்தது. வைகை அணையில் 25 மி.மீ., அரண்மனைப்புதுாரில் 39.4 மி.மீ., போடியில் 32.4 மி.மீ., கூடலுாரில் 56.5 மி.மீ., பெரியகுளத்தில் 30 மி.மீ., பெரியாறு அணையில் 12.2 மி.மீ., தேக்கடியில் 29.4 மி.மீ., ஆண்டிபட்டியில் 25.6 மி.மீ., மழை பதிவானது.

இதேபோல் மாவட்டம் முழுவதுமே மழை பெய்துள்ளதாகவும், வைகை அணைக்கு தற்போது நீர் வரத்து விநாடிக்கு 3205 கனஅடியாக உள்ளதாகவும், அணையில் இருந்து விநாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுவதாகவும், வைகை அணைக்கு நீர் வரத்து நேரம் ஆக, ஆக அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாகவம், தேனி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Tags:    

Similar News