துப்புரவு பணியாளர்கள் பற்றாக்குறையால் குப்பை மேலாண்மையில் திணறும் தேனி

Sanitation Worker - தேனி நகராட்சியில் துப்புரவு பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக குப்பை மேலாண்மையில் பெரும் குளறுபடி ஏற்பட்டு வருகிறது.;

Update: 2022-08-16 04:06 GMT

Sanitation Worker - தேனியில் நாளுக்கு நாள் பெருகி வரும் மக்கள் தொகையால் குப்பைகளும் அதிகரித்து வருகின்றன. தினமும் 50 டன்னுக்கும் அதிகமான குப்பைகள் சேகரமாகின்றன. மொத்தம் 27 ஆயிரத்து 621 வீடுகள் உள்ளன.

இதே எண்ணிக்கையில் பல்வேறு வகையான வணிக, தொழில் நிறுவனங்கள் உள்ளன. தினமும் பல லட்சம் மக்கள் பக்கத்து ஊர்களில் இருந்து தேனி வந்து செல்கின்றனர். தற்போதைய கணக்குப்படி தேனிக்கு 315 துப்புரவு பணியாளர்கள் தேவைப்படுகின்றனர். ஆனால் தற்போது 80 பேர் மட்டுமே பணியில் உள்ளனர்.

இந்த 80 பேரை வைத்துக் கொண்டு 315 பேர் செய்யக்கூடிய வேலையை எப்படிசெய்து முடிக்க முடியும். எனவே குப்பை மேலாண்மையில் தேனி நகராட்சி திணறுகிறது.

இது குறித்து தலைவர் ரேணுப்பிரியாவிடம் கேட்ட போது, 'தேனி நகராட்சியில் தற்போது பணிபுரியும் தற்காலிக பணியாளர்களின் ஒப்பந்த பணிக்காலமும் நிறைவடைய உள்ளது. எனவே உடனடியாக 200 துப்புரவு பணியாளர்களை தற்காலிகமாக நியமனம் செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என்றார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News