கம்பம் புதுப்பட்டி, அனுமந்தன்பட்டியில் 20 நாட்களாக குடிநீர் சப்ளை துண்டிப்பு

கம்பம் அருகே உள்ள க.புதுப்பட்டி, அனுமந்தன்பட்டி பேரூராட்சிகளில் 20 நாட்களுக்கும் மேலாக குடிநீர் சப்ளை இல்லை.;

Update: 2022-05-08 03:35 GMT

லோயர்கேம்ப் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் கூடலுார், கம்பம், புதுப்பட்டி, அனுமந்தன்பட்டி, உத்தமபாளையம், தேவாரம் உட்பட பல குடியிருப்பு பகுதிகளுக்கு குடிநீர் சப்ளையாகி வருகிறது. இந்த பைப் லைனில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், குடிநீர் சப்ளை நிறுத்தப்பட்டு உடைப்பினை சரி செய்யும் பணிகள் நடக்கிறது. இந்நிலையில் மற்ற குடியிருப்பு பகுதிகளுக்கு மாற்றுத்திட்டங்களின் மூலம் அவ்வப்போது குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. ஆனால் க.புதுப்பட்டிக்கும், அனுமந்தன்பட்டிக்கும் மாற்றுத்திட்டங்கள் இல்லை. இதனால் இந்த பகுதிகளில் 20 நாட்களுக்கும் மேலாக குடிநீர் சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் அருகில் உள்ள தோட்டங்களுக்கு சென்று குடிநீர் பிடித்து வரும் அளவுக்கு சிக்கல் நீடிக்கிறது.

Tags:    

Similar News