லோயர்கேம்ப்பில் குடிநீரில் கழிவுநீர் கலப்பதாக பொதுமக்கள் அதிருப்தி
தேனி மாவட்டம், கூடலுார் நகராட்சிக்கு உட்பட்ட லோயர்கேம்ப்பில் குடிநீரில் கழிவுநீர் கலப்பதாக, பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.;
லோயர்கேம்பில் இன்று விநியோகம் செய்யப்பட்ட குடிநீர் கழிவுநீர் கலந்து கருப்பு நிறத்தில் துர்நாற்றத்துடன் இருந்தது.
தேனி மாவட்டம் கூடலுார் நகராட்சி 21வது வார்டு பகுதியான லோயர்கேம்ப் குடியிருப்பு பகுதி முல்லை பெரியாற்றின் கரையில் அமைந்துள்ளது. இங்கு ஆற்றில் இருந்து எடுக்கப்படும் குடிநீர் சுத்திகரிக்கப்படாமல் விநியோகிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
இன்று விநியோகம் செய்யப்பட்ட குடிநீர் கருப்பு நிறம் கலந்து கலங்கலாகவும், துர்நாற்றத்துடனும் இருந்தது. இது பற்றி கூடலுார் நகராட்சி நிர்வாகத்திடம் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது என, பொதுமக்கள் தெரிவித்தனர்.