150 ஆண்டுகளுக்கு முன்னர் பென்னிகுயிக் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
முல்லை பெரியாறு அணை கட்டிய கர்னல் பென்னிகுயிக் 150 ஆண்டுகளுக்கு முன்னர் வாங்கிய சம்பளம் குறித்து பல தகவல்களை வெளியாகியுள்ளது
முல்லை பெரியாறு அணை கட்டிய ஆங்கிலேயே பொறியாளர் கர்னல் பென்னிகுயிக் 150 ஆண்டுகளுக்கு முன்னரே 2752 ரூபாய் மாதச்சம்பளம் பெற்றார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
கவிஞர் வெண்ணிலா ஆங்கிலேயே பொறியாளர் மெக்கன்சி எழுதி ஒரு புத்தகத்தை அடிப்படையாக வைத்து கர்னல் பென்னிகுயிக் தனது சொத்துக்களை விற்றா முல்லை பெரியாறு அணை கட்டினார்? என்ற கேள்வியை எழுப்பி இருந்தார். இந்த விஷயம் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமனாதபுரம் மாவட்டங்களில் கொழுந்து விட்டு எரிகிறது.
கர்னல் பென்னிகுயிக் பற்றி வெண்ணிலா தெரிவித்த கருத்துக்களை வாபஸ் பெற வேண்டும். வெண்ணிலா பொதுவெளியில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில் வழக்கு தொடர்வோம். போலீசில் புகார் செய்வோம். கருப்பு கொடி காட்டி போராட்டம் நடத்துவோம் விவசாயிகள் கடும் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
கர்னல் பென்னிகுயிக் பற்றிய சிறப்புக்களை விவசாயிகள் தேடித்தேடி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இன்று ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் வெளியிட்டுள்ள பதிவில் பல சுவாராஸ்யங்களை தெரிவித்துள்ளார். அதில் அவர் வெண்ணிலாவிற்கு பல கேள்விகளை எழுப்பி உள்ளார். அதில் சிலவற்றை இங்கு காணலாம்.
* 150 ஆண்டுகளுக்கு முன்னரே எந்த ஒரு தொழில்நுட்பமும் இல்லாத காலத்தில் மிக, மிக அடர்ந்த வனத்திற்குள் கடல் மட்டத்தில் இருந்து 2900ம் அடி உயரத்தில் அப்பாவி மக்களுடன் கர்னல் பென்னிகுயில் ஒரு நாள் வாழ்ந்தது ஒரு யுகம் வாழ்ந்ததற்கு சமம். அவர் இந்த வாழ்க்கையை 8 ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறார்.
* 1857ம் ஆண்டு நடந்த சிப்பாய்க்கலகம் என் தந்தை படிக்கும் போது சிப்பாய் கலகம் என்றே இருந்தது. நான் படிக்கும் போது அது சிப்பாய் புரட்சியாக மாறி இருந்தது. என் மகள் அதனை முதல் இந்திய சுதந்திர போர் என படித்துக் கொண்டிருக்கிறார். ஆக வரலாற்று பதிவுகள் கூட சில நேரங்களில் மாற்றத்திற்கு உட்படுகிறது.
* முல்லை பெரியாறு அணை கட்ட முதன் முறையாக ஆங்கிலேய அரசு ஒதுக்கிய நிதி, அணை கட்டுமானத்தின் போது அடித்துச் செல்லப்பட்டதால் வீணாகிப்போனது. அதன் பின்னர் ஆங்கிலேய அரசு நிதிதரவில்லை.
* தனது கர்னல் பென்னிகுயிக் தனது சொத்துக்களை விற்றதில் இருந்தே அவரது வறுமையான வாழ்க்கை தொடங்கியது.
* தான் எப்படிப்பட்ட சவாலான பணியை மேற்கொண்டுள்ளோம் என்பதை கர்னல் பென்னிகுயிக் மிகவும் சரியாகவே உணர்ந்துள்ளார். கவிஞர் வெண்ணிலாவிற்கு அது கூட புரியவில்லை.
* 150 ஆண்டுகளுக்கு முன்பே கர்னல் பென்னிகுயில் மாதம் 2752 ரூபாய் மாதச்சம்பளம் பெற்றார். இப்போது அது எத்தனை லட்சம் ரூபாய்க்கு சமம் என்பதை நிதி ஆலோகர்களிடம் கேட்டால் கூட கணக்கு போட முடியாமல் திணறுவார்கள். அவ்வளவு சம்பளம் வாங்கிய அவர், நினைத்திருந்தால் எப்படிப்பட்ட ஒரு சுகபோக வாழ்க்கை வாழ்ந்திருக்க முடியும்.
* முல்லை பெரியாறு அணை கட்டப்படும் போதே, வெள்ளத்தில் பல முறை அடித்துச் செல்லப்பட்ட போதும், ஆங்கிலேயே அரசு அவரை விசாரணைக்கூண்டில் நிறுத்திய போதும், அவர் மனம் தளரவில்லை. இது தான் விடாமுயற்சி என்பது. அவரது மனோபலமே இன்று கம்பீரமாக நிமிர்ந்து நிற்கிறது. ஐந்து மாவட்டங்களில் வசிக்கும் ஒரு கோடிப்பேரை வாழ வைத்துக் கொண்டுள்ளது.
* முல்லை பெரியாறு அணை கட்ட பல தடுப்பணைகளை கட்ட வேண்டும் என கர்னல் பென்னிகுயிக் கொடுத்த அறிக்கையை ஏற்றுக் கொண்ட ஆங்கிலேய அரசு நிதி தரவில்லை. அப்போது தமிழகத்தின் மிகப்பெரும் ஆளுமைகளாக இருந்த பழனிச்சாமி செட்டியார், ஆங்கூர் ராவுத்தர் உட்பட பலர் ஆதரவும், கர்னல் பென்னிக்குயிக் சொத்துக்களை விற்று கொண்டு வந்த பணமும், அவரது மனைவியின் நகைகளை விற்று கிடைத்த பணமும் தான் இன்று அணையாக நிற்கிறது என்பதை மறந்து விடக்கூடாது.
* கவிஞர் வெண்ணிலா குறிப்பிட்டுள்ள பொறியாளர் மெக்கன்ஸி ஒரு கணக்குப்பிள்ளை மட்டுமே. அவர் பல செலவுகளை, நடைமுறை செலவுகளை பதிவு செய்யவில்லை.
* அணை கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை குளிரில் இருந்து பாதுகாக்க தினமும் 500 லிட்டர் சாராயம் காய்ச்சி வழங்கி உள்ளார். இந்த விஷயத்தை எல்லாம் மெக்கன்ஸி பதிவு செய்துள்ளாரா?
* கொசுக்கடியில் இருந்து அணை கட்டுமான பணிக்கு வந்த தொழிலாளர்களை பாதுகாக்க தினமும் கர்னல் பென்னிகுயிக் வழங்கிய நாட்டு மருந்துகள் குறித்த செலவுகள் மெக்கன்ஸி புத்தகத்தில் பதிவிடப்பட்டுள்ளதா?
* கட்டுமான பணியின் போது இறந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு வழங்கப்பட்ட இழப்பீட்டு தொகையினை மெக்கன்ஸி பதிவு செய்துள்ளாரா?
* அணை கட்டும் போதும், வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்த, தடுப்பணைகள் கட்டப்பட்ட செலவுகளை மெக்கன்ஸி பதிவு செய்துள்ளாரா?
* சென்னை அண்ணாசாலையில் உள்ள ஒரு அலுவலகத்தில் சுகபோக பணியிலா தொழிலாளர்கள் இருந்தனர். அடர்ந்த வனம், கொடிய மிருகங்கள், கொட்டும் பணி, மிரட்டும் வெள்ளம், கொல்லும் கொள்ளை நோய்கள், தங்க இடம் இல்லாத சூழல் போன்ற பல கடும் துயரங்களை தாண்டித்தானே தொழிலாளர்கள் பணிபுரிந்தனர். அவர்களை பாதுகாக்க எவ்வளவு செலவுகள் வழங்கப்பட்டிருக்கும்.
* அணை கட்டி முடித்த பின்னர், இந்திய அரசு பணி நிறைவடைந்த பின்னர், இங்கிலாந்து திரும்பிய கர்னல் பென்னிகுயிக், அங்கு ராயல் இன்ஜினியரிங் கல்லுாரியில் பணிபுரிந்து தான் தன் வாழ்க்கையை நடத்தியிருக்கிறார்.
* அவர் இந்திய அரசு பணியில் ஓய்வு பெறும் போது மாதம் 2752 ரூபாய் சம்பளம் பெற்ற அவரக்கு, ஆங்கிலேயே அரசு எத்தனை லட்சங்கள் பணிக்கால கொடையாக கொடுத்திருக்கும். அதன் தற்போதய மதிப்பு என்ன? அந்த பணத்தை வைத்து பென்னிகுயிக் என்னவெல்லாம் செய்திருக்கலாம்.
* ஆனால் ஆங்கியே அரசு அப்போது அவருக்கு ஒதுக்கிய தொகுப்பு வீட்டில் தான் அவர் வாழ்க்கையை நடத்தினார். அதற்கு காரணம் என்ன என்பதை அந்த கணக்குப்பி்ள்ளை மெக்கன்ஸியிடம் கேட்டுச் சொல்லுங்கள் வெண்ணிலா.
* அவர் நினைத்திருந்தால் அவர் பெற்ற குழந்தைகளை எப்படியெல்லாம் வளர்த்திருக்கலாம். படிக்க வைத்திருக்கலாம். ஆனால் அவர் பெற்ற ஒரே மகன் கூட பிழைப்பு தேடி ஜெர்மனிக்கு ஏன் சென்றார்?
* நுனிப்புல் மேயும் வெண்ணிலாவே, நீங்கள் உங்கள் கருத்தை திரும்ப பெறுங்கள். அல்லது நீதிமன்ற படிக்கட்டுகளில் ஏற தயாராகுங்கள். இவ்வாறு கூறியுள்ளார்.