தி.மு.க.,வின் சாதனைகளை கூறினாலே எளிதில் வெற்றி: 32வது வார்டு வேட்பாளர் செல்வம்

முதல்வரின் மக்கள் சேவைகளை கட்சியினர் எடுத்துச் சொல்லுங்கள் எளிதில் வெற்றி பெறலாம் என தேனி 32வது வார்டு தி.மு.க., வேட்பாளர் வழக்கறிஞர் செல்வம் பேசினார்.

Update: 2022-02-07 13:19 GMT

தேனி நகராட்சி 32வது வார்டில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர் செல்வம். 

தேனி நகராட்சி 32வது வார்டில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர் செல்வம் தனது வார்டில் பிரச்சாரத்திற்கு செல்லும் போது, தமிழக முதல்வர் ஸ்டாலின், தி.மு.க., மாவட்ட செயலாளர் தங்க.தமிழ்செல்வன், பெரியகுளம் எம்.எல்.ஏ., சரவணக்குமார் மக்களுக்கு செய்த வரும் நற்பணிகளை எடுத்துச் சொல்லுங்கள் எளிதில் வெற்றி கிடைக்கும் என பேசினார்.

தேனி நகராட்சி 32வது வார்டில் தி.மு.க., வேட்பாளராக களம் இறங்கி உள்ளவர் வழக்கறிஞர் செல்வம். இவர் நேற்று தனது அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் தேர்தல் வியூகம் குறித்த ஆலோசனையில் ஈடுபட்டார்.

கூட்டத்தில் பேசிய வழக்கறிஞர் செல்வம், தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் இதுவரை எந்த ஒரு சிறு குறைபாடும் யாராலும் சொல்ல முடியவில்லை. தவிர தனது தேர்தல் வாக்குறுதிகளில் மிகப்பெரும்பாலான வாக்குறுதிகளை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றி உள்ளார். வாக்குறுதிகளில் குறிப்பிடாத பல விஷயங்களையும் முதல்வர் நிறைவேற்றி உள்ளார். முதல்வர் ஸ்டாலின் ஆட்சி மீது மக்களுக்கு மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. பருவமழை காலங்களிலும், கொரோனா பேரிடரின் போதும், தி.மு.க., ஆட்சி சவால்களை எதிர்கொண்ட விதம் மக்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.

நமது வடக்கு மாவட்ட செயலாளர் தங்க.தமிழ்செல்வன், எம்.எல்.ஏ., சரவணக்குமார் ஆகியோர் அரசு கொண்டு வந்துள்ள திட்டங்களை மக்களுக்கு கொண்டு போய் சேர்ப்பதில் மிகுந்த முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர். இதுவரை நமது தொகுதிகளில் பல ஆயிரம் பேர் நம் ஆட்சியின் பலன்களை பெற்றுள்ளனர்.

நான் நமது வார்டில் எம்.எல்.ஏ., மாவட்ட செயலாளர் ஆகியோருடன் மக்களை சந்தித்துள்ளேன். பல நுாறு பேருக்கு நலத்திட்ட உதவிகளை பெற்று தந்துள்ளேன். இன்னும் பல ஆயிரம் பேருக்கு பலன் கிடைக்கப்போகிறது. யார், யார் பலனடைந்துள்ளனர்? யார், யாருக்கு இனிமேல் பலன் கிடைக்கப்போகிறது? என்ற பட்டியல் நம்மிடம் உள்ளது.

தி.மு.க., தொண்டர்கள் அனைவரும் இந்த பட்டியலில் உள்ளவர்களை சந்தித்து நம் முதல்வர் செய்தது, மாவட்ட செயலாளர் செய்தது, எம்.எல்.ஏ., செய்த வேலைகளை மக்களிடம் எடுத்துச் சொல்லி ஓட்டு கேட்க வேண்டும். மற்ற வாக்காளர்களிடமும் நமது சாதனைகளை விரிவாக எடுத்துச் சொல்ல வேண்டும். இனிமேல் கிடைக்க போகும் பலன்கள் குறித்தும் விரிவாக மக்களிடம் சொல்ல வேண்டும். நாம் கட்சி தலைமை, நிர்வாகிகளின் சாதனைகளை சொல்லியே நாம் எளிதில் வெற்றியை பெற்று விடலாம். எனவே இந்த விஷயத்தில் நம் கட்சியினர் மிகவும் தெளிவான அணுகுமுறையினை கையாள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News