முக்கிய பிரமுகர்கள் பிரசாரத்துக்குப்பின்னர் திமுக வேட்பாளருக்கு சிவப்பு கம்பளம்
தேனி நகராட்சி 32 வது வார்டு பிரச்னைகளை தீர்த்து வைப்பதாக திமுக மேலிடத் தலைவர்கள் நேரடியாக வந்து உறுதி அளித்துள்ளனர்
தேனி நகராட்சி 32வது வார்டு தி.மு.க., வேட்பாளர் வழக்கறிஞர் செல்வம். இவர் ஓட்டு கேட்டு சென்ற போது, கடந்த 10 ஆண்டுகளாக இப்பகுதி அசுர வளர்ச்சி பெற்றாலும், கழிவுநீர் கடத்திச் செல்வது, ரோடு அமைப்பது, தெருவிளக்கு அமைப்பது, போக்குவரத்து வசதிகள் செய்வதில் பின்னடைந்து உள்ளது என மக்கள் நேரடியாக செல்வத்திடம் புகார் செய்தனர்.
அவர் இந்த புகாரை தமிழக முதல்வர் வரை கொண்டு சென்று விட்டனர். அமைச்சர் ஐ.பெரியசாமி, வடக்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் தங்க.தமிழ்செல்வன், எம்.எல்.ஏ. சரவணக்குமார் உட்பட தி.மு.க., வி.வி.ஐ.பி.,க்கள் 32வது வார்டில் பிரச்சார மேடை அமைத்து, மக்கள் சொன்ன கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று விட்டோம். நீங்கள் தி.மு.க.,விற்கு வாக்களியுங்கள் உடனே நிறைவேற்றுகிறோம் என உறுதி அளித்தனர்.
அதுவரை வழக்கறிஞர் செல்வம் ஒட்டு கேட்டு சென்ற போது, குறைகளை நிறைவேற்றித் தாருங்கள்.என கேட்ட மக்கள். தங்கள் குறைகள் அனைத்தும் நிறைவேறியது போல் நினைத்து வழக்கறிஞர் செல்வத்திற்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்து வருகின்றனர். திமுக.வின் வெற்றி பட்டியலில் 32வது வார்டும் சேர்ந்து விட்டது என்று பேசிக்கொள்கிறார்கள். கட்சியின் வி.வி.ஐ.பி.,க்களை களம் இறக்கியது. மக்கள் தரும் வரவேற்பே இதனை உறுதிப்படுத்துகிறது என திமுகவினர் கூறி வருகின்றனர்.