திமுக அமோக வெற்றி: முன்பதிவு செய்த கேரள ரிசார்ட்களுக்கு தேவையில்லாமல் போனது

திமுக அமோக வெற்றி பெற்றதால் கவுன்சிலர்களை வைத்து குதிரை பேரம் நடத்தத் தேவையில்லாமல் போன கேரள ரிசார்ட்கள்;

Update: 2022-02-23 02:30 GMT

தேனி மாவட்டத்திற்கு அருகில் கேரளாவில் இயற்கை சூழலில் பெரிய ரிசார்ட்டுகள் அதிகளவில் உள்ளன. தேனி மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இழுபறி ஏற்பட்டால், வெற்றி பெற்ற கவுன்சிலர்களை கூவத்துார் பாணியில் கடத்திச் சென்று தங்க வைத்து பேரம் பேச பல வி.ஐ.பி. -க்கள் கேரள ரிசார்ட்களை புக் செய்து தயாராக வைத்திருந்தனர்.ஆனால் தி.மு.க. அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் அறுதிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதால், கவுன்சிலர்களை கடத்திச் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. இதனால் புக் செய்யப்பட்டிருந்த ரிசார்ட்களுக்கு தற்போது தேவையில்லாமல் போய் விட்டது.

Tags:    

Similar News