போடி நகராட்சியில் திமுகவினர் ஊர்வலமாக வந்து வேட்புமனு: அதிமுகவினர் முற்றுகை
தி.மு.க.,வினர் ஊர்வலமாக வந்து வேட்புமனு தாக்கல் செய்ததை கண்டித்து போடி நகராட்சி அலுவலகத்தை அ.தி.மு.க.,வினர் முற்றுகையிட்டனர்.;
தி.மு.க.,வினர் ஊர்வலமாக வந்து முற்றுகையிட்டதை கண்டித்து அ.தி.மு.க.,வினர் போடி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
தேனி மாவட்டத்தில் இன்று வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது. இன்று பெரியகுளம், போடி, சின்னமனுார் உட்பட பல பகுதிகளில் பா.ஜ.,வினர் ஊர்வலமாக வந்து மனுதாக்கல் செய்தனர். போடியில் வடக்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் தங்க தமிழ்செல்வன் தலைமையில் போடி நகர செயலாளர் செல்வராஜ் உட்பட தி.மு.க.,வினர் ஊர்வலமாக வந்து மனுதாக்கல் செய்தனர்.
தி.மு.க.,வினர் கொரோனா விதிமுறைகளை மீறியதாகவும், தேர்தல் விதிகளின்படியும் நடந்து கொள்ளவில்லை. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போடி அ.தி.மு.க., நகர செயலாளர் செல்வராஜ் தலைமையில் அக்கட்சியினர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். நகராட்சி கமிஷனர் ஷகிலா, டி.எஸ்.பி., சுரேஷ் உட்பட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னர் அ.தி.மு.க.,வினர் முற்றுகை விலக்கிக் கொள்ளப்பட்டது.