தேனி மாவட்ட சதுரங்க போட்டி: திறமையை வெளிப்படுத்திய மாணவர்கள்
தேனி கிராண்ட் மாஸ்டர் செஸ் அகாடமியில் 41வது மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி நடந்தது.;
தேனி கிராண்ட் மாஸ்டர் செஸ் அகாடமியின் சார்பில் 41 -வது மாவட்ட அளவிலான சதுரங்க போட்டியும், சாதனை பெண்களுக்கு விருது வழங்கும் விழாவும் அகாடமி வளாகத்தில் நடந்தது. அகாடமி செயலாளர் மாடசாமி தலைமை வகித்தார். இணைச்செயலாளர் அமானுல்லா முன்னிலை வகித்தார்.
அகாடமி தலைவரும், தமிழ்நாடு மாநில சதுரங்க நடுவருமான சையது மைதீன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் உதவி பேராசிரியர் டாக்டர் எஸ்.சரவணன், வெளிச்சம் அறக்கட்டளை நிறுவனர் வி.சிதம்பரம், ஆலோசகர் வி.சாய்வெங்கடேசன் , சமுக ஆர்வலர் ஸ்ரீ பிரியங்கா உட்பட பலர் கலந்து கொண்டனர். போட்டி ஏற்பாடுகளை இயக்குனர் அஜ்மல்கான் செய்திருந்தார்.
சாதனை பெண்களுக்கான விருதுகள்: லட்சுமிபுரம் அரசு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் முருகலட்சுமி, கம்பம் ராம்ஜெயம் வித்தியா மந்திர் உயர்நிலைபள்ளி ஆசிரியர் கே. மேனகா ஆகியோருக்கு சாதனைப்பெண்கள் விருது வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற மாணவர்கள் விபரம்: 10-வயது பிரிவில் மாணவிகள்: 1.பி.கே.தன்யாஸ்ரீ, 2.கே.தமன்யா, 3.என். மோனிஷா, 4. ஆர்.நித்திஷாஸ்ரீ 5. எம். மேகா முதல் ஐந்து இடங்களை பெற்றனர். மாணவர்கள் பிரிவில்:1.ஆர்.அகஸ்தியன், 2.எஸ்.சாய்ரிஷி, 3.ஆர்.பரத், 4.எஸ்.ரகுநாத், 5.எம்.பி. தேகஹன்ந், 6.பி.சித்தேஸ், 7.எம்.கவின் கண்ணன், 8.பிஎச்..லோசித் ஆகியோரும் வெற்றி பெற்றனர்.
15- வயது பிரிவில் மாணவிகள்: 1.வி. தாரணிக்காஸ்ரீ, 2.எஸ்.பரணி, 3.எஸ். கீர்த்தனா, 4.வி. பூஜா, 5.என்.நீத்திகா ஸ்ரீ யும் மாணவர்கள் : 1.பி.ரூசன் 2.பி. தசரதன் 3.பி.வசிசித் 4. பி.முக்தேஸ் 5.ஆர்.நிலேஸ் முகுந்தன் 6.எச்.ஜோஸ்வா சாய்வர்சன் 7.ஆர்.பரத், 8.பி. பிரித்திவ் பாண்டியன் ஆகியோரும்
இளம் சதுரங்க வீரர்களுக்கான பரிசினை தேனி என்.எஸ்.. வித்தியாலயா பள்ளி மாணவர் எம். பிரகதீஸ், கே. லட்சுமிபுரம் அரசு தொடக்கப் பள்ளி மாணவன் எம்.லோகேஸ் சக்தி, கே.பிரஜித் வும் சாந்திநிகேதன் பள்ளி மாணவி எஸ். ரக்ஷிதாஸ்ரீ, மற்றும், கேஆர்.சம்யுக்தா வும் தட்டிச்சென்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள், கோப்பைகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.