தேனியில் மாவட்ட அளவிலான குடியரசு தின செஸ் போட்டிகள்
தேனி கிராண்ட்மாஸ்டர் செஸ் அகாடமி சார்பில் மாவட்ட அளவிலான 51வது குடியரசு தினவிழா சதுரங்கப் போட்டிகள் நடந்தன.
தேனி கிராண்ட் மாஸ்டர் செஸ் அகாடமி வளாகத்தில் நடந்த இந்த போட்டிகள் அகாடமி பொருளாளர் ஆசிரியர் S.கணேஷ்குமார் தலைமையில் நடந்தது. செயலாளர் R.மாடசாமி முன்னிலை வகித்தார். அகாடமி தலைவரும் தமிழ்நாடு மாநில சதுரங்க நடுவருமான S.சையது மைதீன் அனைவரையும் வரவேற்றார். போட்டி இயக்குனர் S. அஜ்மல்கான் விழா ஏற்பாடுகளை செய்திருந்தார்.
சிறப்பு அழைப்பாளராக K. லட்சுமிபுரம் அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியரும், பள்ளி மேலாண்மை குழு ஆலோசகருமான மாரிதங்கம், தேனி அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனை டாக்டர் K.ராஜேஸ்வரன் பங்கேற்று போட்டிகளை துவங்கி வைத்து, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.
வெற்றி பெற்றோர் விபரம்:9- வயது பிரிவில் 1.J.தியாஸ்ரீ 2,R,செல்வநிரஞ்சன்,3,M.லோகேஷ்சக்தி, 4, N.மோனிஷா, 5, S. ஸ்ரீஆக்னியா 6, R.இஷான்7, A.நித்தின்ராஜ்,8, R.ரோகித்அஸ்வா 9, D.ஜெய்ஆதவ்,10, R.சர்வேஷ், 11, R.சர்வேஷ்வர்,12, S.சிந்துஜஸ்வின் 13, P.ஸ்ரீராம், இளம் சதுரங்க வீரர் பரிசை A.சித்திக்நரேன் பெற்றார்,
மற்றும் 11 - வயது பிரிவில் 1.B.சித்தேஷ், 2,S. சைரஸ்ப்ளசன்,3, M. தேகந், 4,S.Pபுவன்சங்கர்,5, V.பிரியதர்ஷன், 6,A.சந்தோஷ், 7. V.தர்ஷன் 8, S.முகுந்தன் 9, D.ஜஸ்வந் , 10. R.நிஜிதாஶ்ரீ,11, M. கவின்கண்ணன், 12. S. ஹரிஹரசுதன், 13.M.ரித்வான் ஆகியோரும் Open to all -ல் 1.V. தாரணிக்காஶ்ரீ 2, K.ராஜேஸ்வரன் 3.K.அஸ்வத் 4, P.முக்தேஷ் 5.S.பரணி 6, N.ராஜாமுகமது 7, J.தியாஸ்ரீ,8, S. வர்ஸ்னிபிரியா, 9. S.நாகபிரனேஷ்,10 .N.மோனிஷா ஆகியோர் வெற்றி பெற்றனர்,
சிறந்த பள்ளிகளுக்கான விருதுகள் லட்சுமிபுரம் அரசு தொடக்கப் பள்ளி (பெரியகுளம் வட்டம் ) K. லட்சுமிபுரம் அரசு தொடக்கப்பள்ளி ( தேனி வட்டம்) தேனி மேரிமாதா CMI பப்ளிக் பள்ளி, மற்றும் தேனி மேலப்பேட்டை இந்து நாடார்உறவின்முறை வித்தியாலயா பள்ளிக்கும் வழங்கப்பட்டது.