கம்பத்தில் தரமற்ற ரேஷன் அரிசி விநியோகம்: எஸ்டிபிஐ கட்சியினர் முற்றுகை
கம்பத்தில் தரமற்ற ரேஷன் அரிசி வழங்கப்பட்ட ரேஷன் கடையினை எஸ்.டி.பி.ஐ., கட்சியினர் முற்றுகையிட்டனர்.
கம்பத்தில் நல்ல தரமான ரேஷன் அரிசியை கடத்தி விட்டு, தரமற்ற ரேஷன் அரிசி விநியோகிப்பதாக எஸ்.டி.பி.ஐ., கட்சியினர் ரேஷன் கடையினை முற்றுகையிட்டனர்.
தேனி மாவட்டம் முழுவதும் சில நாட்களாகவே ரேஷன் கடைகளில் மிகவும் தரமற்ற அரிசி விநியோகம் செய்யப்படுவதாக பரவலாக புகார் எழுந்துள்ளது. இன்று கம்பம் செக்கடி தெருவில் உள்ள ரேஷன் கடையில் தரமற்ற ரேஷன் அரிசி வழங்கப்படுவதாகவும், தரமான அரிசியை மறைத்து வைத்துள்ளதாகவும் எஸ்.டி.பி.ஐ., கட்சியினர் புகார் செய்து, செக்கடி தெரு ரேஷன் கடையினை முற்றுகையிட்டனர்.
இன்ஸ்பெக்டர் புவனேஷ்வரி அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, ரேஷன் கடையில் இருந்த தரமான அரிசியை மக்களுக்கு வழங்க ஏற்பாடுகளை செய்தார். அதன் பின்னர் முற்றுகை விலக்கிக் கொள்ளப்பட்டது.