தேவதானப்பட்டி வனப்பகுதியில் தொடர்ந்து எரியும் காட்டுத்தீ
தேவதானப்பட்டி வனப்பகுதியில் காட்டுத்தீ தொடர்ந்து பற்றி எரிந்து வருகிறது.;
தேனி மாவட்டத்தில் தேவதானப்பட்டி, கும்பக்கரை, முருகமலை வனப்பகுதிகள் திண்டுக்கல் வனக்கோட்டத்தில் வருகின்றன. இப்பகுதியில் காட்டுத்தீ தொடர்ச்சியாக பற்றி எரிகிறது.
இதனால் இங்குள்ள விலை உயர்ந்த மரங்கள், வனவிலங்குகளுக்கு கடும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. தேவதானப்பட்டி ரேஞ்சர் தலைமையிலான வனக்காவலர்கள், தொடர்ந்து தீயை அணைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை.