ஏலக்காய் விலை வீழ்ச்சி ஸ்பைசஸ் போர்டு முன் ஆர்ப்பாட்டம்
ஏலக்காய் விலை வீழ்ச்சியால் விரக்தி அடைந்த ஏல விவசாயிகள் போடி ஸ்பைசஸ் போர்டு அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஏலக்காய் விலை வீழ்ச்சியை தடுக்க வலியுறுத்தி, போடி ஸ்பைசஸ் போர்டு அலுவலகம் முன்பு ஏல விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சில நாட்களுக்கு முன்பு வரை ஏலக்காய் கிலோ ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்றது. தற்போது இதன் விலை 820 ரூபாய் ஆக குறைந்து விட்டது. தவிர தொடர் மழையால் அழுகல் நோய் பாதிப்பு ஏற்பட்டு விளைச்சல் குறைந்து விட்டது. தொழிலாளர்களின் சம்பள உயர்வால் உற்பத்தி செலவுகளும் அதிகரித்து விட்டது. இந்நிலையில் விலையும் வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர். எனவே விலை வீழ்ச்சியை தடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஏல விவசாயிகள் போடி ஸ்பைசஸ் போர்டு முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் தங்கள் கோரிக்கைகளை மனுவாக எழுதி ஸ்பைசஸ் போர்டு நிர்வாகத்திடம் வழங்கினர்.